IND vs WI :இந்திய டி20 அணிக்கு இவரு ரொம்ப முக்கியம். அவரை சேர்த்தாலே டீம் வெயிட் ஆயிடும் – யார் அந்த வீரர்?

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 3-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்து தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல நிலைமையில் இருந்தது.

ஆனாலும் ஹார்டிக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் பின்வரிசையில் உள்ள பேட்டிங் வீக்னஸ் தெரிந்தது. அதாவது அக்சர் பட்டேலுக்கு பின்னர் வந்த யாராலும் சரியாக பந்தை பார்த்து அடிக்கக்கூட முடியவில்லை என்ற குறை அப்பட்டமாக தெரிந்தது.

- Advertisement -

இதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. இந்நிலையில் இது போன்ற தோல்விகளை தவிர்க்க பின் வரிசையில் பேட்டிங் தெரிந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருப்பது அவசியம் என்பதனால் ஷர்துல் தாகூரும் இருக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் விக்கெட் டேக்கர் என்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டக் கூடியவர்.

இதையும் படிங்க : IND vs WI : அறிமுக போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த – திலக் வர்மா

குறிப்பாக பவுண்டரிகளை எளிதாக அடிக்கும் திறமையுடைய ஷர்துல் தாகூர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒற்றைய ஆளாக அதிரடி அரைசதம் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறவும் செய்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டிங் திறன் கண்டிப்பாக அணிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement