ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றியால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள உயர்வு – டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் இதோ

IND-vs-NZ
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது கேமரூன் கிரீனின் அசத்தலான சதம் (174) காரணமாக முதல் இன்னிங்சில் 383 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 179 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதன் காரணமாக 204 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி கடினமான இலக்கினை துரத்தி விளையாடிய நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லையன், இரண்டாவது இன்னிங்சிலும் 6 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ஆரம்பித்தபோது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன்பிறகு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள வேளையில் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தற்போது புள்ளி பட்டியலில் 64.58 சதவீதத்துடன் முதலிடத்தினை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : எங்களை வளர விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா.. ஐசிசி’யை சாரமாரியாக விளாசிய வெ.இ வாரிய இயக்குனர்

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் தற்போது 60 சதவீத வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடமும், வங்கதேச அணி நான்காவது இடத்தையும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement