எங்களை வளர விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா.. ஐசிசி’யை சாரமாரியாக விளாசிய வெ.இ வாரிய இயக்குனர்

WI johnny grave
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்று எதிரணிகளை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் கத்துக்குட்டியாக மாறிப் போயுள்ளது. போதாக்குறைக்கு ரசல், சுனில் நரேன் போன்ற ஓரிரு தரமான வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

அதன் காரணமாக மெகா வீழ்ச்சியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியதை மறக்க முடியாது. இந்த மிகப்பெரிய சரிவுக்கு தங்களுடைய வீரர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சிக்கியுள்ளது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

முடிவு பண்ணிட்டீங்களா:
இந்நிலையில் ஐசிசி மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் இதர நாடுகள் அனைத்தும் சேர்ந்து மீண்டும் தங்களை வலுவான அணியாக வரக்கூடாது என்பதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்வதாக வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜானி கிரேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக ஏற்கனவே ஐசிசி கொடுத்து வந்த வருமானத்தை 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அதிகப்படியான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகில் உள்ள அனைவரும் மீண்டும் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி தேவை என்று கருதுகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வலுவான நிலையை எட்டக்கூடாது என்பதற்கு தேவையான அனைத்தையும் இந்த உலக கிரிக்கெட் செய்வதாக நாங்கள் உணர்கிறோம்”

- Advertisement -

“அது ஒரு ஆதரவளிக்கும் தொனி என்று இயன் பிஷப் தன்னுடைய பாணியில் சொல்வது போல் இது ஒரு ஏமாற்றத்தின் விளைவு என்று நான் நினைக்கிறேன். தலைப்புச் செய்திகளில் எங்களுக்கு அதிக பணம் தருவதாக ஐசிசி சொல்கிறது. ஆனால் உண்மையில் எங்களுடைய வருவாய் 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கான காரணத்தை புரிந்து கொள்ள நாங்கள் சிரமப்படுகிறோம். நாம் அனைவரும் நம்மை கவனித்துக் கொள்ளும் சமூகமாக செயல்படுகிறோமா? இப்படி இருந்தால் நாங்கள் சிறந்த தயாரிப்பை களத்தில் வைக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல் 2024 : மும்பையிடம் ஹாட்ரிக் தோல்வி.. ஒரிஜினல் ஃபார்முக்கு திரும்புவதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை

இருப்பினும் தற்போது யார் அதிக வெற்றிகளை பெற்று அதிக வருமானத்தை கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஐசிசி திருப்பி அந்த வருமானத்தை அதிகமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலேயே குறைவான வெற்றிகளை பெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. ஆனால் அதிக வெற்றிகளை பெறும் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வருவாய் அதிகரித்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement