
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது இந்திய அணி செய்த ஒரு தவறு தற்போது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்திய அணி இந்த காரியத்தை செய்திருக்கக் கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி இந்த போட்டியில் என்ன நடந்தது? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபே ஆறாவது வீரராக களமிறங்கி 34 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக மாறியது.
அதோடு அவர் போட்டியின் முதல் பாதிலேயே வெளியேறியது தான் இவ்வளவு விமர்சனத்திற்கும் காரணமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் போது இருபதாவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த அவர் அந்த கடைசி பந்திற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் ஓவர்டன் வீசிய பந்தில் தலையில் அடி வாங்கினார். இதன் காரணமாக முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னர் அவர் கன்கஷன் காரணமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்படி வெளியேறிய பின்னர் ஐசிசி விதிமுறைப்படி ஒரு ஆல்ரவுண்டருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரை களமிறக்காமல் இந்திய அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது. அவரும் இந்த போட்டியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மாறினார்.
இதையும் படிங்க : என்னங்க பித்தலாட்டமா இருக்கு? ஐசிசி விதிமுறையை பின்பற்றாமல் வென்ற இந்தியாவை விமர்சித்த பீட்டர்சன்
இப்படி ஒரு ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரை களமிறக்காமல் முழுநேர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது எந்த முறையில் விதிமுறைக்கு உட்பட்டு வருகிறது? இந்திய அணி செய்தது மிகப்பெரிய தவறு என்று பலரும் கூறிவருகின்றனர்.