- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை : இந்திய அணி சரிசெய்ய வேண்டிய 2 விஷயம் – இதுமட்டும் ஓகே ஆனா கப் நமக்குத்தான்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது கோப்பையை வெல்லும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலியின் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்று போட்டிகளின் முடிவிலேயே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்தே வெளியேறியது. அதனை தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகவே கடந்த ஓராண்டாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

அப்படி தற்போது ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி மிகத் தீவிரமாக இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. இன்னும் இரு தினங்களில் அதாவது அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து தங்களது முழு பலத்தையும் வெளிகாட்ட இந்திய அணி காத்திருக்கிறது.

- Advertisement -

இம்முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் முழு பலத்துடன் களமிறங்க இருக்கும் இந்திய அணியானது கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு 15 ஆண்டு கால ஏக்கத்தை இம்முறை போக்கியே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு சாம்பியன் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்க உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு இரண்டு முக்கிய தடைகள் இருக்கிறது என்றும் அதனை இந்திய அணி சமாளித்தால் நிச்சயம் கோப்பை நமக்கு தான் என்றும் பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீப காலமாகவே இந்திய அணிக்கு இரண்டு பலவீனங்கள் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் இந்திய அணி அதிகமாக ரன் வழங்கி வருவது மிகப்பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பும்ரா இல்லாத இந்திய அணியில் அதிக அளவில் டெத் ஓவர்களில் ரன்கள் கசிவதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளை கூட சமீபத்தில் தொடர்ச்சியாக இழந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசினால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அதே போன்று இந்திய அணியின் டாப் ஆர்டரில் அனைத்து வீரர்களுமே வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதினால் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் வீரரான ஷாஹின் அப்ரிடி, நியூசிலாந்து வீரரான ட்ரென்ட் போல்ட், மற்றும் ஆஸ்திரேலிய வீரரான மிட்சல் ஸ்டார்க் ஆகியோரது பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணியின் வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தப்போவது எப்படி? – ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

இடது கை பந்துவீச்சாளர்களை சமாளித்து விட்டால் பேட்டிங்கிலும் இந்திய அணி பலம் அடையும். இப்படி டெத் ஓவர் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என இந்த இரண்டு பலவீனங்களை மட்டும் இந்திய அணி சுதாரித்துக் கொண்டால் நிச்சயம் கோப்பை நமக்கு தான் என்று பலரும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by