உமேஷ் யாதவ் சொன்னது போல இந்திய அணி ஆதிக்கம் – இது மட்டும் நடந்தா நமக்கு தான் வெற்றி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் காரணமாக 191 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 50 ரன்களையும், ஷர்துல் தாகூர் 57 ரன்களையும் குவித்தனர்.

indvseng

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இனிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி தனது 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்படி 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில் :

மூன்றாம் நாளிலிருந்து பந்து அதிகளவு ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகாது என்று தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி இந்திய அணி எளிதாக ரன் குவிக்கும் என்றும் 400 ரன்களுக்கு மேல் இந்திய அணி சென்றால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறியது போலவே தற்போது மூன்றாம் நாள் காலையில் பந்து அதிகளவு ஸ்விங் ஆகாததால் இங்கிலாந்து வீரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் எளிதாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தற்போது மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியை விட தற்போது 9 ரன்கள் முன்னிலை பெள்ளதால் இந்திய அணி இதனை அப்படியே கொண்டுசென்று 350 ரன்கள் வரை முன்னிலை பெற்றால் இந்திய அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pujara 1

இரண்டாவது இன்னிங்சில் துவக்க வீரர் ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது ரோகித் சர்மா 47 ரன்கள், புஜாரா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement