
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 24-ஆம் தேதி புனே நகரில் துவங்க இருக்கிறது.
இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் ஏற்கனவே இங்கு புனே வந்தடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
அதே வேளையில் இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுடன் முனைப்புடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. இதன் காரணமாக இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை இங்கு காணலாம். அந்த வகையில் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இருந்து இந்த போட்டியில் மூன்று மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் முழுஉடற்தகுதியை எட்டியுள்ளதால் மீண்டும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். இதன் காரணமாக கே.எல் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோன்று மூன்றாவதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தற்போது சுமாரான பார்மில் செயல்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த மூன்று மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : 15 சிக்ஸ்.. 33 பந்தில் 100.. கம்பியாவை பொளந்த சிகந்தர் ராசா.. ரோஹித், கோலி, சூர்யகுமாரை முந்தி 2 உலக சாதனை
1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) சர்பராஸ் கான், 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ்/வாஷிங்டன் சுந்தர், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்/ஆகாஷ் தீப்.