
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 தொடரில் 55 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த பத்தாவது டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக களம் காண இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி புதிய இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது.
அதற்குள் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற சூழலும் இருந்து வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அதனை தவிர்த்து இந்திய அணி பலமாகவே உள்ளது.
அவர்கள் இருவரும் மீண்டும் பார்மிற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றும் வாய்ப்பிருப்பதாக பலராலும் பேசப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றினால் இரண்டு புதிய உலக சாதனைகளை நிகழ்த்தும். அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
இதுவரை டி20 உலக கோப்பை தொடரானது ஒன்பது முறை நடைபெற்றுள்ள வேளையில் எந்த ஒரு அணியும் அடுத்தடுத்த இரண்டு தொடர்களை கைப்பற்றியதில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் 2026 டி20 உலக கோப்பையையும் கைப்பற்றினால் அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற சாதனையை நிகழ்த்தும்.
இதையும் படிங்க : இந்திய டி20 அணியிலிருந்து வெளியேறிய அக்சர் பட்டேல்.. மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ
அதேபோன்று இதுவரை எந்த ஒரு அணியும் மூன்று முறை டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லாத வேளையில் அடுத்த வெற்றியின் மூலம் அந்த சாதனையையும் இந்திய அணி தனதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.