இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்து விட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றி விட்டன.
அக்சர் பட்டேல் வெளியேற்றம்.. மாற்று வீரர் அறிவிப்பு :
அதற்கு அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி டிசம்பர் 1-ஆம் தேதி நாளை லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த டி20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக விளையாடாத அக்சர் பட்டேல் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் இருந்தும் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான அறிக்கையில் : கடந்த போட்டியின் போது உடல்நல குறைவு காரணமாக அக்சர் பட்டேல் விளையாடவில்லை.
அவரது உடல்நிலை தற்போது விளையாடும் அளவிற்கு ஏதுவாக இல்லை என்பதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதன் காரணமாக எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளுக்குமான இந்திய அணியில் இருந்து அவர் வெளியேறுகிறார் என பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மோசமான உடல்நிலை காரணமாக அவர் இந்த டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அந்த மரியாதைக்காக 5 வாய்ப்பை கொடுங்க.. அதுலயும் சொதப்புனா கில்லை கழற்றி விடனும்.. அஸ்வின் ஓப்பன்டாக்
அதன் காரணமாக அக்சர் பட்டேலுக்கு பதிலாக மாற்று வீரராக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஷபாஷ் அகமது இதுவரை மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



