- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு எப்படி இருக்கு – ஓர் அலசல் இதோ

2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு அணிகள் குரூப் ஏ பிரிவிலும், மற்ற நான்கு அணிகள் குரூப் பி-யிலும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 குரூப் அணிகளும் லீக் சுற்று போட்டிகளில் விளையாடிய பின்னர் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். பின்னர் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெறும் என்கிற வகையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? :

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி செல்ல என்ன வாய்ப்பு உள்ளது? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை பலம் குறைந்த அணியாக பார்க்கப்பட்டாலும் ஐசிசி போட்டிகளின் போது அதிர்ச்சி வெற்றிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த அணியில் சௌமியா சர்க்கார், தன்சீம் ஹாசன், மெஹதி ஹாசன் போன்ற வீரர்கள் ஆல்ரவுண்டர்களாக இருப்பதால் அந்த அணியின் பலம் சற்று அதிகரித்துள்ளது. அதே வேளையில் லிட்டன் தாஸ் சாஹிப் அல் ஹசன் ஆகியோர் இந்த தொடரில் விளையாடாததால் அவர்களுக்கு சிறிய பின்னடைவும் உள்ளது. இருந்தாலும் அந்த அணி சற்று கடுமையான போட்டியை வெளிப்படுத்தும் என்பதனால் அதனை சமாளிக்க இந்திய அணி சரியான திட்டமிடுதலுடன் செல்ல வேண்டும்.

அடுத்ததாக நியூஸ்லாந்து அணியை பொறுத்தவரை எப்பொழுதுமே ஐசிசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர். இம்முறையும் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் என அனைத்துமே சிறப்பாக இருப்பதால் அவர்களையும் இந்திய அணி சற்று உஷாராக தான் எதிர்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அணியிலும் சிறப்பான வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கை காட்டிலும் அந்த அணியின் பந்துவீச்சு யூனிட் மிகச் சிறப்பாக உள்ளதால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான பேட்டிங் திட்டத்தை சரியான முறையில் வெளிக்கொணர வேண்டும்.

- Advertisement -

அந்த அணியில் நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்பதனால் அவர்களுக்கு எதிராக இந்திய அணியின் திட்டம் சரியாக இருந்தால் மட்டுமே அவர்களையும் வீழ்த்த முடியும். இப்படி மூன்று அணிகளுமே பலமான அணிகளாக இருந்தாலும் இந்திய அணி இந்த மூன்று அணிகளையும் சமாளித்து விளையாடும் அளவிற்கு பலமாகவே உள்ளது. இந்த மூன்று போட்டியில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : அர்ஷ்தீப் சிங்கால் அவரோட இடத்தை பூர்த்தி செய்ய முடியாது.. இந்திய அணி கஷடப்படும் – முன்னாள் இங்கி வீரர் கிண்டல்

மேலும் இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் அங்கு இந்திய அணிக்கு சாதகம் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் துபாய் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானமாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்து வருகிறது. இந்த இரண்டுமே இந்திய அணியில் உள்ளதால் இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -