INDvsENG : மீதமிருந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு. நட்சத்திர வீரர் நீக்கம் – முழுலிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 5 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியில் ஊடுருவிய கோவிட் பரவல் காரணமாக வீரர்கள் பாதிக்கப்பட்டதால் அந்த கடைசி டெஸ்ட் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் விரைவில் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணியின் கிரிக்கெட் நிர்வாகங்கள் தெரிவித்தபடி தற்போது மீண்டும் அந்த எஞ்சியுள்ள 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்து போட்டிக்கான அட்டவணையையும் அறிவித்துவிட்டது.

- Advertisement -

இதன்காரணமாக இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. அதன்படி இந்த ஐந்தாவது எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா இந்த தொடரில் செயல்படுகிறார். கூடுதலாக அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுல் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரே ஒரு முக்கிய மாற்றமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கழட்டி விடப்பட்ட புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரில் புஜாரா மட்டும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரை தவறவிட்ட புஜாரா இங்கிலாந்து சென்று கவுண்டி தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக சதங்களை விளாசியதன் காரணமாக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட ரஹானே ரஞ்சி கோப்பையில் ஒரு சதம் அடித்தாலும் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதோடு ஐபிஎல் தொடரிலும் அவர் கொல்கத்தா அணிக்காக சொதப்பலான ஆட்டத்தை விளையாடியதன் காரணமாக தற்போது நட்சத்திர ஆட்டக்காரரான ரஹானே இந்த இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட உள்ளார். அவரை தவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழு பட்டியல் இதோ :

இதையும் படிங்க : தெ.ஆ டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பில்லை – இதை படிங்க புரியும்

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5), ஷ்ரேயாஸ் ஐயர், 6) ஹனுமா விஹாரி, 7) புஜாரா, 8) ரிஷப் பண்ட், 9) கே.எஸ் பரத், 10) ரவீந்திர ஜடேஜா, 11) ரவிச்சந்திரன் அஷ்வின், 12) ஷர்துல் தாகூர், 13) முகமது ஷமி, 14) பும்ரா, 15) முகமது சிராஜ், 16) உமேஷ் யாதவ், 17) பிரசித் கிருஷ்ணா

Advertisement