தெ.ஆ டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பில்லை – இதை படிங்க புரியும்

Karthik
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 70 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகளான 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. அதன்படி வருகிற 29-ஆம் தேதியுடன் இந்த ஐபிஎல் தொடர் நிறைவடையவுள்ளது. பின்னர் ஜூன் 9ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Indian Team

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ நேற்று தேர்வு செய்து வெளியிட்டது. அதில் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடி வரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீப காலமாகவே இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தனது மிகச்சிறப்பான அதிரடி ஆட்டம் மூலம் பெங்களூர் அணிக்காக போட்டிகளை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியின் பினிஷராகவும் அவரைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்த வேளையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

karthik

இப்படி தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உள்ளனர். குறிப்பாக கே.எல் ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை உடையவர்கள்.

- Advertisement -

அதோடு இந்த இந்திய அணிக்கு ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் நிச்சயம் இந்த ஐந்து போட்டிகளிலும் விளையாடுவார்கள். அதேபோன்று துவக்க வீரராக இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்பு உண்டு. மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் விளையாடுவார்கள். அதேபோன்று 6 ஆவது வீரராக அண்மையில் பார்ம்முக்கு திரும்பிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்.

இதையும் படிங்க : 3 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் – அவரது ரிப்ளை என்ன தெரியுமா?

இதனால் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்-க்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். அதேபோன்று பந்துவீச்சை பொறுத்தவரை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்பதனால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் பெரும்பாலும் அவர் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Advertisement