
கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் நிறைவடைய காத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அடுத்த ஒரு ஆண்டும் இந்திய அணிக்கு பிசியான போட்டி அட்டவணைகள் நிறைந்து இருக்கின்றன.
அந்த வகையில் ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு வடிவ போட்டிகளிலும் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.
அந்த வகையில் எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மூன்று வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வழக்கமாக இருக்கும் இந்திய டெஸ்ட் அணியே இந்த தொடரிலும் தொடர்கிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான சுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி இதோ :
இதையும் படிங்க : எம்.எஸ் தோனியின் மேலும் ஒரு சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்த – சஞ்சு சாம்சன்
1) சுப்மன் கில், 2) கே.எல்.ராகுல், 3) யஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) சாய் சுதர்சன், 5) ரிஷப் பண்ட், 6) தேவ்தத் படிக்கல், 7) நிதிஷ்குமார் ரெட்டி, 8) வாஷிங்டன் சுந்தர், 9) குல்தீப் யாதவ், 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா, 12) மானவ் சுதார், 13) குர்னூர் பிரார், 14) ஹர்ஷ் துபே, 15) துருவ் ஜூரேல்.