- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதிர்பாராத 2 மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. நெதர்லாந்து அணிக்கெதிராக – ஏற்பட்டுள்ள மாற்றம்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக ஏ பிரிவில் இடம் பெற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த லீக் சுற்று போட்டிகளில் ஆரம்பத்தில் அமெரிக்கா, நமீபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :

அதனை தொடர்ந்து இந்த லீக் சுற்று ஆட்டத்தில் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இன்று இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி பிப்ரவரி 18-ஆம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் பெரியளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை மட்டுமே சூரியகுமார் யாதவ் செய்துள்ளார்.

அதிலும் யாரும் எதிர்பாராத இரண்டு மாற்றங்களாக துணை கேப்டன் அக்சர் பட்டேல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்தனர். நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிராக அடித்த அடி.. தரவரிசை பட்டியலில் பெரிய முன்னற்றத்தை கண்ட – இஷான் கிஷன்

1) அபிஷேக் சர்மா, 2) இஷான் கிஷன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) வாஷிங்டன் சுந்தர், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

- Advertisement -