சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான போட்டிகளுக்குமான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட இஷான் கிஷன் :
ஐசிசி-யின் ஆடவருக்கான டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த டாப் 10-ல் இஷான் கிஷனுக்கும் இடம் கிடைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்த இஷான் கிஷன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து முதன்மை துவக்க வீரராக விளையாடி வருகிறார்.
அந்த வகையில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று ஆட்டத்தில் இரண்டு அரைசதம் அடித்த அவர் இந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். அந்த வகையில் இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி எட்டாம் இடத்திற்கு வந்துள்ளார். இவர்களை தவிர வேறுயெந்த பேட்ஸ்மேனும் 10-ல் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க : 2 ஆவது பாகிஸ்தான் வீரராக பர்ஹான் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
அதேபோன்று பந்துவீச்சு துறையை பொறுத்த வரை ஜஸ்ப்ரீத் பும்ரா 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்திற்கும், அக்சர் பட்டேல் நான்கு இடங்கள் முன்னேறி 14-வது இடத்திற்கும் வந்துள்ள வேளையில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



