ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி – உத்தேச பட்டியல்

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணி திடீரென ஆஸ்திரேலியாவில் தோற்றதும், இரண்டாவது போட்டியில் விராட் கோலி சென்ற பின்னர் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்றதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற போகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

Rohith

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இரு அணிகளும் முன்நிலையை தக்க வைக்க முயற்சி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த போட்டியிலும் அஜின்கியா ரகானே தான் கேப்டனாக இருக்க போகிறார். தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பார்ப்போம். இந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் கலந்து இருக்க வாய்ப்பிருக்கிறது

முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் அந்த அளவிற்கு சரியாக விளையாடவில்லை. இரண்டாவது போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் முன்னணி அதிரடி வீரரான ரோகித் சர்மா கண்டிப்பாக இந்த டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதி மூன்றாவது வீரராக செதேஷ்வர் புஜாரா, 4-வது வீரராக கேப்டன் அஜின்கியா ரஹானே ஆகியோர் களம் இறங்குவார்கள்.

Rohith

5 ஆவது வீரராக ஹனுமா விகாரியும், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் ஆகியோர் களமிறக்கபடுவார்கள். சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், மட்டும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் நவதீப் சைனி ஆகியோர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை யாரவது ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டால் கண்டிப்பாக தங்கராசு நடராஜன் களமிறக்கப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அணி உத்தேசமாக கணிக்கப்பட்ட அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பி.சி.சி.ஐ சார்பில் 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணி முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

bumrah

3 ஆவது போட்டிக்கான உத்தேச 11 பேர் கொண்ட அணி இதோ :

1) ரோகித் சர்மா, 2) சுப்மன் கில், 3) செதேஷ்வர் புஜாரா, 4) அஜின்கியா ரகானே, 5) ஹனுமா விஹாரி, 6) ரிஷப் பந்த், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஸ்வின், 9) நவதீப் சைனி, 10) பும்ரா, 11) முகமது சிராஜ்

Advertisement