விராட் கோலி கேப்டனாக செயல்பட இருக்கும் இன்றைய கடைசி போட்டிக்கான பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் விளையாடும் நான்கு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற வேளையில் இன்று தங்களது கடைசி ஆட்டத்தில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஏற்கனவே சூப்பர் 12-சுற்றில் நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியாது என்கிற காரணத்தினால் சம்பிராதய ஆட்டமாகவே இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

ashwin

- Advertisement -

இதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி தோல்வி என எதை சந்தித்தாலும் பிரச்சனை இல்லை என்கிற காரணத்தினால் இன்றைய போட்டியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் களம் இறங்குவார்கள். ஏனெனில் கேப்டனாக கோலியின் கடைசி போட்டி இது என்பதனால் அவர்கள் இருவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். அதேபோன்று மூன்றாவது இடத்தில் கோலியும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐந்தாவது இடத்தில் இஷான் கிஷன் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பண்ட்டிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைத்ததால் அவருக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று ஆறாவது இடத்தில் ஹார்டிக் பண்டியா, ஏழாவது இடத்தில் ஜடேஜாவும் விளையாடுவார்கள். சுழற்பந்து வீச்சாளர்களில் அஷ்வின் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வருண் சக்கரவர்த்திக்கும் பதிலாக ராகுல் சாஹரை பரிசோதிக்க இன்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல்.ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) ராகுல் சாகர், 10) பும்ரா, 11) முகமது ஷமி

Advertisement