1000 ஆவது ஒருநாள் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – காரணம் என்ன தெரியுமா?

Black-band
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தியாவின் 1000-வது ஒருநாள் போட்டி என்ற மிகப்பெரிய வரலாற்று சாதனைக்கு இடையில் இந்த போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

INDvsWI

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி எப்போதுமே இந்திய அணி சர்வதேச கிரிகெட்டில் விளையாடும்போது பிரபலங்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இதுபோன்று கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது வழக்கம்.

lata mangeshkar

அந்த வகையில் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் அவர்கள் 92 வயதில் இன்று மறைந்து உள்ளதால் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தற்போது இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 11 அதிர்ஷ்டசாலிகள் இவர்கள் தான் – பிளேயிங் லெவன் இதோ

மும்பையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல் நலம் குன்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தற்போது இந்திய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருவதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement