வெற்றிபெற்றதும் பார்ட்டி செய்த நியூசி வீரர்கள். இந்திய வீரர்களுக்கும் அழைப்பு – ஆனால் இந்திய அணி என்ன செய்தது தெரியுமா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இந்த தொடரில் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி இந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

nz

- Advertisement -

ஆனால் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர். அதுமட்டுமின்றி வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கினால் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் விடிய விடிய தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொண்டாட்டம் குறித்து கேப்டன் வில்லியம்சன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த இரவு எங்களுக்கு சிறந்த ஒரு இரவாக அமைந்தது.

taylor-1

கிரிக்கெட்டின் அருமையான தருணங்களுக்குப் பிறகு வீரர்கள் ஒன்றாக வெற்றியை கொண்டாடும் நிகழ்வு சிறப்பானது. அதுமட்டுமின்றி வாட்லிங் இந்த போட்டியோடு ஓய்வு பெற இருப்பதால் அது அவருக்கு நீங்காத நினைவுகளை தரும் ஒரு கொண்டாட்டமாக அமைந்தது என்று வில்லியம்சன் குறிப்பிட்டார். மேலும் இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு இந்திய வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

IND

ஆனால் பிசிசிஐ அதனை மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே போட்டி முடிந்து தோல்வியடைந்த பின்னர் நியூசிலாந்து அணி வீரர்கள் கையில் கோப்பையை ஏந்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்துடன் தங்களது அறைக்கு திரும்பி விட்டனர். அதனால் அவர்களது வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள் சோகமாக கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே அந்த அழைப்பினை இந்திய நிர்வாகம் மறுத்து இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement