ஆஹா இந்தியா – பாகிஸ்தான் உட்பட 4 அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர். பாகிஸ்தானின் புதிய ஐடியா – முழு விவரம் இதோ

cricket match
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் – பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தாலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பை மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை ஆகிய கிரிக்கெட் தொடர்களில் மட்டும் வேறு வழியின்றி இவ்விரு அணிகளும் மோதி வருகின்றன. இந்த 2 அணிகளும் மோதும் கிரிக்கெட் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் எப்போதுமே ஆவலுடன் காத்திருந்தாலும் இரு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களோ அந்த போட்டிகளை நடத்த வேண்டா வெறுப்பாய் காணப்படுகின்றன.

புதிய தொடர் :
கடந்த பல வருடங்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் அது தோல்வியில் முடிந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் பங்கு பெரும் நாற்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் கூறியுள்ளதாவது, “ஹெலோ ரசிகர்களே ! ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் பங்குபெற கூடிய சூப்பர் டி20 சீரிஸை நடத்த ஐசிசியிடம் விரைவில் விண்ணப்பம் வேண்டி கேட்கப்போகிறேன். இந்த தொடரானது ஒவ்வொரு வருடமும் இந்த 4 வெவ்வேறு நாடுகளில் சுழற்சி அடிப்படையில் நடக்கும். இதில் வரும் வருமானத்தை ஐசிசி கூட்டமைப்பில் இடம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் சதவிகித அடிப்படையில் பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு புதிய முறை உருவாக்கப்படும், நமக்கு வெற்றியாளர் கிடைப்பர் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட வேளையில் இந்த 2 அணிகளுடன் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சேர்ந்து மோதினால் அந்த தொடர் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

ரசிகர்களின் ஏக்கம்:
மேலும் கடந்த சில வருடங்களாகவே சர்வதேச அளவில் நேருக்கு நேர் கிரிக்கெட் தொடர்களை தவிர முன்னணி அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதில்லை. எடுத்துக்காட்டாக கடந்த 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய “நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர்” மற்றும் 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 அணிகள் மோதிய “காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடர்” போன்ற கிரிக்கெட் தொடர்கள் சமீப காலங்களாக நடைபெறாமல் இருந்து வருகிறது.

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற “நிதஹாஸ் முத்தரப்பு” தொடரில் இந்தியா விளையாடி கோப்பையை வென்றது, அதன்பின் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அதுபோன்றதொரு கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருக்கிறது,
ஒருவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும் இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் அந்த ஏக்கம் தீரும் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியாக:
கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நேருக்கு நேர் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் மோதியது, அதன் பின் கடந்த 10 வருடங்களாக இவ்விரு அணிகளும் பை-லேட்ரல் தொடர்களில் மோதிக் கொள்ளாமல் உலக கோப்பைகளில் மட்டும் சந்தித்து வருகின்றன. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த பாகிஸ்தான், வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது குறிப்பிடதக்கது.

Advertisement