- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? – விவரம் இதோ

அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி இருந்தது. அதனைத்தொடர்ந்து இந்திய அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் விளையாட இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? :

அந்தவைகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சூரியகுமார் யாதவின் தலைமையில் அறிவிக்கப்பட்ட வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வடோதராவில் ஜனவரி 11-ஆம் தேதி துவங்குகிறது.

பின்னர் ஜனவரி 14-ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்திலும், ஜனவரி 18-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு ஜனவரி 3 அல்லது 4 ஆகிய தேதிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் வீரர்கள் அனைவரும் தற்போது விஜய் ஹசாரே தொடரில் தீவிரமாக விளையாடி வரும் வேளையில் இந்திய அணியின் அறிவிப்பு வெளியான பின்னர் அவர்கள் விஜய் ஹசாரே தொடரிலிருந்து விலகி இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கெவின் பீட்டர்சன் மாதிரி இஷான் கிஷன் இந்த ஷாட்டை சூப்பரா ஆடுறாரு – ஹர்பஜன் சிங் பாராட்டு

டி20 போட்டிகளில் இருந்து கழட்டி விடப்பட்ட சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -