
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி 249 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது வரை இரண்டு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் குவித்துள்ளது.
துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆட்டம் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்திய அணி இன்று கடைசி நாளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்றால் ரன்களை விரைவாக குவிக்க வேண்டும். அப்படி அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டுமெனில் ரஹானேவிற்கு முன்னதாகவே ரிஷப் பண்ட் களத்திற்கு வரவேண்டும்.
பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணி விரைவாக ரன்களை சேர்க்க முடியும். அவருடன் இணைந்து மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடினால் ரன்களை விரைவாக குவிக்க முடியும். பின்னர் ஒரு 50 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய வைக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.
அதற்கு நிச்சயம் இன்றைய போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததும் பண்ட் களத்திற்கு வந்து எதைப்பற்றியும் யோசிக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும். இருப்பினும் கோலியின் கையில் தான் இந்த முடிவு உள்ளது. அதேவேளையில் இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களைக் கூறுவது குறிப்பிடத்தக்கது.