வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சொதப்புவதற்கு காரணம் இதுதான் – சரிசெஞ்சே ஆகனும்

Kohli-1
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கும் இந்திய அணியானது மீண்டும் ஒரு முறை ஐசிசி கோப்பையை கைப்பற்ற தவறியிருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் அணியில் இருந்து வரும் மிகப் பெரிய பலவீனத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

jadeja 2

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை ஆட வைத்து மிக நீண்ட பேட்டிங் ஆர்டரை ஏற்படுத்தியபோதும், பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது இந்திய அணி. தோல்விக்கு இது ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், டெய்ல் என்டர்கள் எனப்படும் பின் வரிசை வீரர்கள் அணிக்கு உதவியாக சிறிது ரன்களைகூட சேர்க்காமல் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை இழந்ததும் மற்றொரு காரணமாக அமைந்திருக்கிறது.

மற்ற நாட்டு அணிகளில் இடம்பிடித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராட், மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற பின் வரிசை வீரர்கள் அந்த அணிக்கு பேட்டிங்கிலும் பக்க பலமாக செயல்பட்டு வரும் நிலையில், அப்படி ஒரு வீரர் இந்திய அணியில் இல்லாமல் போனது மிகப் பெரிய இழப்பாக மட்டுமல்லாமல் மிகப் பெரிய பலவீனமாகவும் கருதப்படுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், நான்கு பின் வரிசை வீரர்கள் அனைவரும் சேர்த்து அடித்த மொத்த ரன்களின் எண்ணிக்கை வெறும் 38 தான்.

Southee 1

முக்கியமாக இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த வேளையில், பின்னால் வந்த வீரர்களால் மேற்கொண்டு 28 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இப்படி இவர்கள் எந்த ஒரு பங்களிப்பையும் அளிக்காமல் இருப்பது என்பது இந்த ஒரு போட்டியில் மட்டும் நடக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே பின்வரிசையில் களமிறங்கும் நான்கு வீரர்களும் சேர்ந்து அடித்த ஒட்டுமொத்த ரன்களின் சராசரி 50க்கும் கீழ்தான் இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில், வேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் வழங்காமல் ஒதுக்கி வைக்கட்டுள்ளார். மற்றொரு வீரரான அஷ்வினும் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எந்த உறுதியும் கிடையாது. எனவே இந்திய அணியானது ஒரு வேகப் பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரை இந்திய அணிக்குள் சேர்ப்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

Thakur 1

இதன் சோதனை முயற்சியாக எதிர்வரும் இங்கிலாந்து தொடரில், ஷர்துல் தாக்கூரை நான்காவது வேகப் பந்து வீச்சாளராக இந்திய அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக, ஷர்துல் தாக்கூரை ஆல்ரவுண்டராக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான பரத் அருண் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement