- Advertisement -
உலக கிரிக்கெட்

சதியை முறியடித்த விதி.. எவ்ளோ தடுத்தும் பாகிஸ்தான் மண்ணில் ஒலித்த இந்திய தேசிய கீதம் – என்ன நடந்தது?

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டமானது லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

பாகிஸ்தானில் ஒலிக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் என்கிற பலமான ரன் குவிப்பை வழங்கியது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் 143 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 3 சித்தர் என 165 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து ஜோ ரூட் 68 ரன்கள் குவித்திருந்தார். அதனை தொடர்ந்து 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆரம்பிக்கும் போது பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததால் பாகிஸ்தான் நாட்டில் இந்திய தேசியக்கொடி பறக்க விடாமல் இருந்தது. அதன் பின்னர் ஐசிசி அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் இந்திய தேசிய கொடியானது பறக்க விடப்பட்டது.

- Advertisement -

இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய அணியை நிராகரித்தாலும் இந்திய மண்ணின் தேசிய கீதம் தற்போது பாகிஸ்தான் மண்ணில் ஒலிக்கப்பட்ட சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் ஒலிப்பதற்கு தயாராக இருந்தது. பொதுவாகவே ஐசிசி தொடர்களின் போது விளையாடும் இரு அணிகளின் தேசிய கீதங்களும் சம்பந்தப்பட்ட மைதானத்தில் ஒலிப்பது வழக்கம்.

இதையும் படிங்க : நானும் பாத்தேன் நல்லவேளை நான் இப்போ பிறக்கல.. அபிஷேக்கை நேராக பாராட்டிய அக்தர்.. 2 முக்கிய அட்வைஸ்

அந்த வகையில் இன்று இங்கிலாந்து அணி தேசிய கீதம் ஒலிக்கப்பட இருந்த நேரத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது. இதன் காரணமாக மைதானத்தில் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் டிஜே-வின் கவனக்குறைவால் இந்த இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட வேளையில் மீண்டும் பாதியில் நிறுத்தப்பட்டு இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -