- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடுமா? – மத்திய அரசு கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் என எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா? : மத்திய அரசு தகவல்

ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணை வெளியானதுக்கு பிறகு அனைத்து அணிகளும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியும் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பகல்ஹாம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனி எப்போதும் இந்திய அணி இரு தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அணி எந்த ஒரு தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக்கூடாது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடா? விளையாடாதா? என்கிற கேள்விக்கு மத்திய அரசு சார்பில் என்ன விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஒரு தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மாட்டார்கள். அதேபோன்று அங்கிருந்தும் யாரும் இங்கு வந்து விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க காரணமே ரோஹித்தின் கதையை முடிக்க தானாம் – ரோஹித் சர்மாவின் கடைசி தொடர்

அதேபோன்று இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடரில் மூன்றாவது பொதுவான நாடுகளில் விளையாடாது. ஆனால் ஐ.சி.சி நடத்தும் பொதுவான தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்கேற்பதை தவிர்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என்று தெரிகிறது.

- Advertisement -