பாம்பு அணிக்கு கண்டிப்பாக ஐசிசி ஆப்படிக்கும்: இந்திய அணியின் மேனேஜர் தகவல் – விவரம் இதோ

Ind-u-19
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் வங்கதேசம் திக்கித் திணறி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

 

- Advertisement -

ban 1

வெற்றிபெற்ற பின்னர் வங்கதேச அணியின் இளம் வீரர்கள் மைதானத்திற்குள் ஆக்ரோசமாக ஓடிவந்து, இந்திய அணியின் அருகில் நின்று வெறுப்பேற்றினர். மேலும் ஒரு சில வீரர்கள் இந்திய வீரர்களின் முகத்திற்கு அருகே வந்து கண்டபடி பல சைகைகளை செய்தனர். இதனால் கடுப்பான இந்திய வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவியது.

இதுகுறித்து இந்திய அணியின் மேலாளர் அனில் படேல் கூறுகையில் : மைதானத்திற்குள் சில நிமிடங்களில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நடந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியின் கடைசி நிமிட வீடியோ-வை ஐசிசி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

ind u 19

இந்த வீடியோவில் யார் தவறு செய்வார்கள் செய்தார்கள் என தெரியவரும். அதன் பின்னர் வங்கதேச வீரர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதை போட்டியில் நடுவராக பணியாற்றிய முன்னாள் வீரர் மன்னிப்பும் கேட்டுள்ளார். கண்டிப்பாக இந்த வீடியோவை முழுமையாக ஐசிசி ஆய்வு செய்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பங்களாதேஷ் அணி கேப்டன் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement