IND vs WI : இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணமே இதுதான். அப்பட்டமாக தெரிந்த வீக்னஸ் – இதை கவனிச்சீங்களா?

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஆகஸ்ட் 3-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ராவ்மன் பவல் 48 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதன் பின்னர் 150 முதல் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்ததால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி விளையாடிய விதத்தில் இருந்து இந்திய அணியின் வீக்னஸ் வெளிப்படையாகவே தெரிந்தது. அதாவது இந்திய அணியின் சார்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அக்சர் பட்டேலோடு சேர்த்து ஏழு விக்கெட் விழுந்தால் பின் வரிசையில் இருக்கும் எந்த வீரர்களாலும் பேட்டிங் செய்ய முடியாது என்பது அப்பட்டமாக தெரியவந்தது.

- Advertisement -

மேலும் ஒரு கட்டத்தில் ஹார்டிக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடும் போது நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அவர்கள் ஆட்டமிழந்து வெளியேறியதும் அக்சர் பட்டேலை மட்டுமே நம்பியிருந்தது. அவரும் வெற்றிக்கான வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : அவர் என்னோட சட்டையின் காலரை பிடிச்சு அடிச்சாரு – இந்தியாவின் முன்னாள் கோச்’சுடன் ஏற்பட்ட மோதல் பற்றி சேவாக் பேட்டி

ஆனால் அவர் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை அடிப்பதற்கே கஷ்டப்படுவது கண்கூடாக தெரிய வந்தது. இதன்மூலம் பின் வரிசையில் இந்திய அணியின் பேட்டிங் பலம் அவ்வளவாக இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement