டி20 வேர்ல்டுகப் : இந்திய அணியுடன் அரையிறுதியில் மோதப்போகும் அணி எது தெரியுமா? – டேஞ்சர் தான்

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் சுற்றில் பங்கேற்ற 12 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிந்து அந்த இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு பங்கேற்கும் என்று கூறப்பட்ட வேளையில் இன்று குரூப் 1 போட்டிகளின் முடிவின்படி குரூப் ஒன்றில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் அணியாக தங்களது அரையிறுதி வாய்ப்பினை உறுதிசெய்துள்ளது.

ENG vs NZ Devon Conway

- Advertisement -

அதேவேளையில் இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியும் 7 புள்ளிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது அணியாகவும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எனவே குரூப் 1-ல் அரையிறுதிக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அதிகாரபூர்வமாக தேர்வு பெற்றுள்ளன.

இதன் காரணமாக குரூப் இரண்டில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது? என்பது குறித்தும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து மோதப் போகும் அணி எது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

INDvsENG

அதன்படி நாளை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. அதேவேளையில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியாக தென்னாப்பிரிக்க அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் நாளை இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் பட்சத்தில் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்த இந்திய அணி குரூப் 1 இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாடும். அதே போன்று குரூப் ஒன்றில் முதல் இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் குரூப் இரண்டில் இரண்டாம் இடம் பிடிக்கப்போகும் தென்னாப்பிரிக்க அணியும் அரையிறுதியில் மோதும் என்பது உறுதி.

இதையும் படிங்க : வீடியோ : நல்லவேள நாளைக்கு பர்த்டே வரல, அந்த சிக்ஸர பார்த்து அதிர்ந்தோம் – விராட் கோலி பற்றி ஜிம்பாப்வே கேப்டன் பேசியது என்ன

நாளைய போட்டியில் ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி கூட அரையிறுதி சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement