IND vs RSA : முதல் 3 ஓவர்களிலேயே வெற்றிக்கான அஸ்திவாரம் போட்ட இந்திய அணி – பாத்திருக்க வாய்ப்பேயில்ல

Harshal-Patel
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவிக்க பின்னர் 107 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

INDvsRSA-Toss

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சே காரணமாக அமைந்தது. ஏனெனில் போட்டியின் துவக்கத்திலேயே முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுமாவை தீபக் சாகர் கிளீன் போல்ட் ஆக்கி முதல் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் டிகாக்கையும், ஐந்தாவது பந்தில் ரைலி ரோசாவையும் கடைசி பந்தில் டேவிட் மில்லரையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தவே இரண்டாவது ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்தது.

Arshdeep Singh

பின்னர் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் மீண்டும் தீபக் சாகர் ஸ்டப்ஸின் டிக்கெட்டை கைப்பற்றவே இந்திய அணி 2.3 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா அணியின் ஐந்து விக்கெட்டுகளை வெறும் 9 ரன்களுக்குள் இந்திய அணியின் பவுலர்கள் வீழ்த்தினர். இப்படி இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சே தென்னாப்பிரிக்கா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மூன்று ஓவர்களிலேயே 9 ரன்களை மட்டுமே குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து சரிவினை சந்தித்ததன் காரணமாக தென்னாப்பிரிக்க அணியால் எந்த ஒரு சூழலிலும் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. குறிப்பாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் மட்டும் 41 ரன்கள் குவிக்கவில்லை என்றால் தென்னாப்பிரிக்க அணியின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க : தீப்தி சர்மாவை விமர்சித்த மைக்கேல் வாகன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆஸி ஜாம்பவான் சிறப்பான பதிலடி

எது எப்படி இருப்பினும் இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement