மும்பை அணியை சேர்ந்த இந்த 2 வீரர்கள் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் – ரசிகர்கள் ஆதரவு

SKY

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று முடிந்த 13ஆவது ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான ஒரு அடித்தளமாக அமைந்தது. இந்த வருடம் அனைத்து அணைகளில் இருந்தும் சில குறிப்பிட்ட இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி அணியில் படிக்கல், பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னோய், மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Dubai

மேலும் மும்பை அணியில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாகர் போன்றோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் இந்திய அணி தேர்வில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் வளர்ந்து வரும் தமிழக வீரரான நடராஜன், கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் வருண் சக்கரவர்த்தி, பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அவர்களை விட சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் அவர்கள் இனி வரும் காலங்களில் இந்திய அணியில் இடம் பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தந்துள்ளனர். ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த இரு வீரர்கள் யாரெனில் மும்பை அணியின் மிடில் ஆர்டரில் மூன்றாவது வீரராக இறங்கி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ்.

sky 2

இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 15 போட்டிகளில் 150 பயணிகளுடன் 461 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் இவ்வளவு திறமையான வீரர் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. நிச்சயம் இந்திய அணிக்கு இவர் தேவை என்ற பல முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதே போன்று மற்றொரு வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

Ishan kishan

ஏனெனில் இந்திய அணியில் நிரந்தர விக்கெட் கீப்பர் இல்லை என்றும் அந்த இடத்தை பண்ட் தவற விட்டுவிட்டார் என்பதனால் இவருக்கு ஒரு வாய்ப்பை தரலாம் என்றும் ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை சமூக வலைதளம் மூலம் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.