2 மேட்ச் சொதப்புன அவருக்கு இடம். 7 சிக்ஸ் அடிச்சவருக்கு இடமில்லையா? – ரசிகர்கள் கேள்வி

IND vs SL
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs SL

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

அதன்படி கடந்த போட்டியில் மோசமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ஹர்ஷல் பட்டேல் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதேவேளையில் இந்திய அணியில் மேலும் ஒரு வீரரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Ruturaj Gaikwad

அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகமான துவக்கவீரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியிலும் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ச்சியாக சொதப்பும் அவருக்கு வழங்கும் வாய்ப்பினை மறுத்து தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அசத்தலான பார்மில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடியதோடு மட்டுமின்றி நடைபெற்று முடிந்த உள்ளூர் தொடர்களிலும் கூட ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை அடித்து பிரமிக்க வைத்தார். இப்படி டி20 கிரிக்கெட்டில் அசத்தலாக விளையாடும் ஒரு வீரரை வெளியில் அமர வைத்து தொடர்ச்சியாக சொதப்பி வரும் சுப்மன் கில்லுக்கு ஏன் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : அதுக்குள்ள பெரியாளா ஆகிட்டீங்களா? சச்சின், ஸ்ரீநாத்தை பாலோ பண்ணிருந்தா இப்படி ஆகிருக்காது – அர்ஷ்தீபை வெளுக்கும் சபா கரீம்

தொடரின் முடிவினை தீர்மானிக்கும் முக்கியமான 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement