சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கே.எஸ் பரத் – விவரம் இதோ

KS Bharat
- Advertisement -

ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ் பரத் இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2024-ஆம் ஆண்டு வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆர்.சி.பி அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் ஆந்திர அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கே.எஸ் பரத் :

இந்நிலையில் 32 வயதான கே.எஸ் பரத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : இந்திய அணியை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்ற அவருக்கு ரிஷப் பண்ட்டின் இருப்பு காரணமாக தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக அவர் இடம்பெற்று வந்தாலும் பிளேயிங் லெவனில் வெகு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.

- Advertisement -

மற்றபடி அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதுமட்டும் இன்றி ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இடம்பெறவில்லை. இதன் காரணமாக எதிர்வரும் தலைமுறைக்கு வழிவிட்டு இந்த ஓய்வு முடிவை கே.எஸ் பரத் எடுத்துள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்ட கே.எஸ் பரத் அதில் குறிப்பிட்டதாவது : உண்மையிலேயே மனநிறையுடன் இந்த ஓய்வு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

இந்திய அணிக்காக விளையாடியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன். என்னுடைய இந்த கரியரில் என்னுடன் நின்ற குடும்பத்தார்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக நான் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இருந்து வருகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஊழியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என அனைவருக்குமே நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை – காரணம் என்ன?

அதுமட்டும் இன்றி நான் ஐ.பி.எல் தொப்பியை முதல் முறையாக விராட் கோலியிடம் இருந்து பெற்றேன். அதேபோன்று இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வாய்ப்பை ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் பெற்றேன். அவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ் என குறிப்பிட்டு அவரது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Advertisement