ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான். கழுவி ஊற்றும் இந்திய ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Naveen-Ul-Haq
- Advertisement -

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக டி20 போட்டிகளில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

PAK vs AFG

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அண்மையில் நடைபெற்று முடிந்த பி.எஸ்.எல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் அதிவேகமாக அரைசதம் அடித்ததுடன், சில வீரர்கள் அடுத்தடுத்த சதங்களையும் விளாசி இருந்தனர். அண்மையில் இந்த psl தொடர் நடைபெற்று முடிந்த பிறகு பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் கூட : ஐ.பி.எல் தொடரை விட பாகிஸ்தான் பிரீமியர் லீக் சுவாரஸ்யமானது சிறந்தது என்று கூறியிருந்தார்.

Nabi

ஆனால் இந்திய ரசிகர்களோ பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்களில் அவர்கள் எளிதாக 240 முதல் 260 ரன்கள் வரை அடிக்கிறார்கள். ஆனால் சவாலான மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட சொல்லுங்கள் பார்ப்போம் என்பது போல கூறி இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் கூறியிருந்தது போல தற்போது சார்ஜா மைதானத்தில் அவர்களது முழு பேட்டிங் திறன் வெளியாகியுள்ளது என இந்த தோல்விக்கு பிறகு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். ஏனெனில் கற்றுக் குட்டி அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியிடமே திணறிய பாகிஸ்தான் வீரர்கள் 100 ரன்களை கூட தொடாமல் அவர்களிடம் ஆட்டம் இழந்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் தொடர்பான தகவலில் முக்கிய முடிவினை எடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

எனவே பாகிஸ்தானில் இருக்கும் ஆடுங்களங்களை தவிர்த்து வேறு எங்காவது சென்று உங்களுடைய திறனை அங்கு காட்டுங்கள் என்பது போன்று இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கழுவி ஊற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement