ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் தொடர்பான தகவலில் முக்கிய முடிவினை எடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணிக்காக ஏகப்பட்ட போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார். அவரது வருகைக்குப் பின்னர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட வேளையில் அடிக்கடி அவர் காயத்தால் விளையாட முடியாமல் போவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bumrah

- Advertisement -

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் பும்ரா மீண்டும் களத்திற்கு திரும்ப எத்தனை மாதங்கள் வரை ஆகும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கூட இதுவரை வெளியாகவில்லை.

அதுமட்டும் இன்றி தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பும்ரா இம்மாதம் முழுவதும் நியூசிலாந்திலேயே தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகுதான் அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Bumrah 1

இதன் காரணமாக பும்ரா எதிர்வரும் ஐபிஎல் தொடரை தவறி விடுவதோடு மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பும்ராவின் காயம் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின் படி : பிசிசிஐ வட்டாரத்திலேயே ஒரு சிலருக்கு மட்டும் தான் பும்ராவின் உடல்நிலை தொடர்பான தகவல் முழுமையாக தெரியும். தேர்வு குழுவினருக்கு கூட பும்ராவின் காயம் மற்றும் அவர் எப்போது குணமடைவார் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உடன் நேரடியாக தொடர்புகொள்ள விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ நியமித்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 தொடரில் காயத்தால் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ள 6 நட்சத்திர வீரர்கள் – லிஸ்ட் இதோ

அவரை தவிர்த்து பிசிசியின் ஒரு சில முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் அவரது இந்த மருத்துவ அறிக்கை ரகசியமாக வைத்திருக்கிறது என்ற தகவலை அவர் கூறியுள்ளார். இம்மாத இறுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement