அவருமட்டும் இருந்திருந்தா தெ.ஆ வீரர்கள் எல்லாம் பவுண்டரி லைன்ல தான் இருந்திருப்பாங்க – இந்திய வீரரை ட்ரென்டாக்கும் ரசிகர்கள்

IND-vs-RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க மண்ணில் எப்பொழுதுமே பேட்டிங்கிற்கு கடுமையான சவால் இருக்கும் வேளையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் கடினப்பட்டனர். குறிப்பாக கே.எல் ராகுலை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரியளவு ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

நேற்றைய ஆட்டநேர முடிவில் கே.எல் ராகுல் 70 ரன்கள்டனும், முகமது சிராஜ் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த முதல்நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய ரசிகர்கள் பலரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் பெயரை தற்போது இணையத்தில் ட்ரென்டாக்கி வருகின்றனர். மேலும் அவர் தற்போது அணியில் இருந்திருந்தால் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார் என்றும் அவர் இருக்கும்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் பவுண்டரி லைனில் தான் இருந்திருப்பார்கள் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் எப்பொழுதுமே ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் சூழ்நிலை அப்படியே மாற்றக்கூடியவர். அதனை அவர் பலமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்தும் நாம் பார்த்திருக்கிறோம். அதுமட்டுமின்றி கடந்த முறை தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : இந்த 70 ரன்ஸ் சதத்துக்கு சமம்.. ராகுல் இப்படி ஆடுறத பாக்க காத்திருந்தோம்.. இந்திய லெஜெண்ட் பாராட்டு

இப்படி ஒரு வீரர் அணியில் இல்லாதது நமது அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றும் ரசிகர்கள் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இருப்பினும் அவரது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் கே.எல் ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement