இந்த இங்கிலாந்து தொடரில் இவரை அணியில் விளையாட வையுங்கள் – இளம்வீரருக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள்

IND
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு தற்போது 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கி தொடர்ந்து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை இத்தொடரானது நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங் வரிசையில் ரோஹித், புஜாரா ஆகியோர் இடங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு யூனிட்டிலும் இன்னும் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நான்காவது வேகப்பந்துவீச்சாளர் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

அப்படி இணையும் பட்சத்தில் ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளர் சார்பாக ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும் அவரை தாண்டி சிறப்பாக பந்துவீசிய கூடிய முகமது சிராஜ்க்கு இந்திய ரசிகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான சிராஜ் முன்னணி வீரர்கள் இன்றி தவிக்கும் போது அணியை பவுலிங்கில் முன்னின்று வழி நடத்தி சிறப்பாக விக்கெட் வேட்டை நடத்தினார்.

siraj

அதுமட்டுமின்றி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்றும் பெயர் எடுத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியிலும், இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்று இருந்தாலும் இதுவரை போட்டியில் விளையாடாமல் இருக்கிறார்.

Siraj 1

எனவே நிச்சயம் 4 ஆவது வேகப்பந்து வீச்சாளர் உடன் இந்திய அணி களம் இறங்கும் போது சிராஜ்க்கு கட்டாயம் வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். முகம்மது சிராஜுன் பந்துவீச்சில் வேகம் மட்டும் இல்லாமல் துல்லியமான ஸ்விங் இருப்பதால் நிச்சயம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement