IND vs AFG : அஸ்வினை தூக்குனது கூட ஓகே தான். ஆனா இப்படி ஒரு முடிவை ஏத்துக்கவே முடியாது – ரோஹித்தை விளாசும் ரசிகர்கள்

Rohit-Toss
- Advertisement -

நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் போட்டியானது இன்று டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. அதன்படி டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது பந்துவீசி வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

- Advertisement -

மேலும் அஸ்வினை தூக்கியது கூட சரிதான் என்றாலும் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கியது தவறான முடிவு என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமிதான் விளையாடி இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் சென்னை மைதானம் சுழலுலுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வினை விளையாட வைத்தார்கள் என்றும் தற்போது டெல்லியில் விளையாடுவதால் இங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்பதனாலே ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஆனால் ஷர்துல் தாகூரையும் தாண்டி வேகப்பந்து வீச்சில் அசத்தலான பார்மில் இருக்கும் முகமது ஷமியை தான் இந்த போட்டியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் பின்வரிசையில் பேட்டிங் டெப்த் வேண்டும் என்பதற்காக ஷர்துல் தாகூரை சேர்த்து இருக்கிறீர்கள் என்றால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதற்கு அணியில் இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs AFG : போட்டி துவங்கும் முன்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய வீரர்கள் – நெகிழ்ச்சியான காரணம் இதோ

மேலும் தற்போதைய இந்திய அணியில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோருடன் ஷமியும் இணைந்தால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி அச்சுறுத்தும் அளவிற்கு பலமான ஒன்றாக இருக்கும் என்பதனால் ஷமிதான் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான சரியான தேர்வு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement