
எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாலமாக நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட முதன்மை அணியை அறிவித்துவிட்டது. அந்த வகையில் இந்திய அணியும் ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அறிவித்த வேளையில் :
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் அவருக்கு மாற்றுவீரராக முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை ரிசர்வ் வீரராக வைத்துவிட்டு நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அறிமுகமான ஹர்ஷித் ராணாவை முதன்மை அணியில் சேர்த்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் கடந்த 2023-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரராக இருக்கும் முகமது சிராஜ் 44 ஒருநாள் போட்டியில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அனுபவம் வாய்ந்த வீரர் ஆனால் இந்த இங்கிலாந்து தொடரில் தான் அறிமுகமான ஹர்ஷித் ராணாவை எப்படி அணியில் சேர்க்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
மேலும் இது கம்பீரின் ஒரு திட்டமாக இருக்கலாம் என்றும் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் கொல்கத்தா அணிக்காக ஆலோசகராக இருந்தபோது அவரது அணியில் ஹர்ஷித் ராணா இருந்ததாலே கம்பீர் தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றும் மற்றபடி முகமது சிராஜ் தான் பும்ரா இடத்தில் விளையாட தகுதியான நபர் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க :
மேலும் ஹர்ஷித் ராணாவை விட அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் தான் துபாய் மைதானத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.