- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்டுக்கு எதுக்கு இந்த பிரமோஷன்.. அப்படி அவர் என்ன பண்ணிட்டாரு.. பி.சி.சி.ஐ முடிவின் மீது – ரசிகர்கள் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆண்டுதோறும் வீரர்களின் தகுதிக்கு ஏற்ப ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்த ஒப்பந்த ஊதிய பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர்களான விராத் கோலி, ஜடேஜா, பும்ரா ஆகியோர் ஏ ப்ளஸ் பிரிவில் அதிக சம்பளத்தை பெறும் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

ரிஷப் பண்டுக்கு எதற்கு சம்பள உயர்வு : ரசிகர்கள் விமர்சனம்

அதனை தொடர்ந்து ஏ பிரிவில் கே.எல் ராகுல், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பி பிரிவில் சூரியகுமார் யாதவ், அக்ஸர் படேல் ஷ்ரேயாஸ் ஐயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

சி பிரிவில் ஜித்தேஷ் சர்மா, ஷிவம் துபே, கே.எஸ் பரத், ஆவேஷ் கான், நித்திஷ் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரேல், இஷான் கிஷன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இப்படி பல்வேறு வீரர்களுக்கு ஒப்பந்த ஊதியப்பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ள வேளையில் ரிஷப் பண்டிற்கு மட்டும் தரம் உயர்த்தியது ஏன்? என்ற கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், துவக்க வீரராகவும் விளையாடுகிறார்.

- Advertisement -

அதனால் டி20 போட்டிகளுக்கு ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதேபோன்று ஒருநாள் அணியிலும் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவதால் அங்கும் அவருக்கு வாய்ப்பில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முதன்மை வீரராக ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : என்னா மனசுய்யா.. 70000 ரூபாய் வீதம்.. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு துபே.. ரசிகர்கள் பாராட்டு

இப்படி டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும் அவருக்கு எதற்கு கிரேட் உயர்வு? அவரை பி பிரிவிலேயே வைத்திருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ரிஷப் பண்டுக்கு வருடம் 5 கோடி ரூபாய் பிசிசிஐ சம்பளமாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -