- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரை எதுக்கு இப்போ டீம்ல சேத்தீங்க.. இந்திய அணித்தேர்வின் மீது ரசிகர்கள் அதிருப்தி – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள வேளையில் இங்கிலாந்து அணியானது இந்தத் தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அவரை எதுக்கு டீம்ல சேத்தீங்க : ரசிகர்கள் கேள்வி

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில வீரர்களின் காயம் காரணமாக முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று மாற்றங்கள் இந்திய அணியில் நிகழ்ந்தன. அதன்படி இந்த தொடரில் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வந்த கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

மேலும் காயமடைந்து வெளியேறிய நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாகூரும், ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக அன்ஷுல் கம்போஜும் வாய்ப்பினை பெற்றிருந்தனர். இதில் ஷர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் முதலாவது போட்டியின் போது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்ட அவர் பேட்டிங்கில் பெரியளவு ரன்களை குவிக்காமலும், பந்துவீச்சிலும் மோசமான செயல்பாட்டையை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற விமர்சனங்கள் இருந்து வந்தன. ஆனால் அவர் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே வீரர் அறிமுகம்.. 3 மாற்றங்களுடன் 4 ஆவது போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த – கேப்டன் கில்

இந்நிலையில் அவர் சேர்க்கப்பட்ட பின்னர் ரசிகர்கள் பலரும் இந்த தேர்வு குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ரசிகர்கள் பலரும் கூறியதாவது : உங்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றால் பேட்ஸ்மேனை தீர்வு செய்திருக்கலாம் அல்லது பந்துவீச்சாளர் வேண்டுமென்றால் பவுலரை தேர்வு செய்திருக்கலாம். இப்படி நல்ல வாய்ப்பை விட்டுவிட்டு ஆல்ரவுண்டர் என நினைத்து ஷர்துல் தாகூரை சேர்த்து தவறு என்றும் அவரால் பெரிய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்க முடியாது என்றும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -