இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க – எளிதில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

Shreyas
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

bumrah

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா(1) மற்றும் இஷான் கிஷன்(16) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மிடில் ஆர்டரில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

jadeja

இந்த போட்டியில் இலங்கை அணி 183 ரன்களை குவித்ததால் நிச்சயம் இந்திய அணி பெரிய போராட்டத்திற்கு பிறகே வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இந்த பெரிய இலக்கை துரத்திய இந்திய அணியானது 17.1 ஓவரிலேயே அதாவது கிட்டத்தட்ட 3 ஓவர்கள் மீதம் இருக்கையிலேயே வெற்றிக்கு சென்றது அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளை 6 பவுண்டரி 4 சிக்சர்கள் என 74 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 25 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி 3 சிக்சருடன் 39 ரன்கள் குவித்தார். அதேபோன்று இறுதியாக களமிறங்கிய ஜடேஜா 18 பந்துகளை மட்டுமே சந்தித்தாலும் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 45 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு. இலங்கை அணியா இப்படி ஆடுனது – என்ன நடந்தது?

இப்படி இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிக அதிரடியாக விளையாடி மூன்று ஓவர்களுக்கு முன்னதாகவே இந்த இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதான வெற்றிக்கு அழைத்துச் சென்றது ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement