- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்துல எப்படி ஆடப்போறாங்கனா கேட்டிங்க? இந்திய பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய – வரலாற்று சாதனை

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்கள் இணைந்து நிகழ்த்திய சாதனை :

இதன் காரணமாக சீனியர் வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இந்த தொடரில் எவ்வாறு அழுத்தத்தை சமாளிக்கப்போகிறது என்கிற பெரிய கேள்வி இருந்தது. தற்போது நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணியானது ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்னிலை வகிக்கிறது.

- Advertisement -

ஆனாலும் நடைபெற்று வரும் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற வேளையில் எஞ்சியுள்ள 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்து தொடரின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இணைந்து மிகச் சிறப்பான சாதனை ஒன்றினை டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை இந்திய பேட்ஸ்மேன்கள் ஒன்றிணைந்து 12 சதங்களை விளாசி அசத்தியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த தொடர் மாறியுள்ளது. இப்படி இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : 120 ரன்ஸ்.. ஃபைனலில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ஏபிடி.. இந்தியாவுக்கு அடுத்து தெ.ஆ சாம்பியனாக சாதனை

இந்த தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நான்கு சதங்களையும், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா இரண்டு சதங்களையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் என 12 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -