ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்டில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் இந்தியா அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றது.

Rahane

- Advertisement -

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 2வது இன்னிங்சை போது இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸ் மொத்தமாக 128 பந்துகளை மட்டுமே சந்தித்த இந்திய அணி 36 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆக இது பதிவாகியுள்ளது.

மேலும் இந்திய அணியில் விளையாடிய ஒரு பேட்ஸ்மேன் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. அனைவரும் 10 ரன்களுக்குள் உள்ளாகவே ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக இந்திய அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 9 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1924-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க போட்டியில் தென்னாபிரிக்க அணி 30 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. அந்த இன்னிங்சில் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்து தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை ஐ.சி.சி யும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மோசமாக விளையாடியது ரசிகர்களுக்கு இடையே விமர்சனத்தை உண்டாகியுள்ளது.

Advertisement