நேற்றைய போட்டியில் ரெய்னாவின் ஆட்டத்தை பாராட்டியே ஆகா வேண்டும் ! இது தான் காரணம்

- Advertisement -

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

suresh-raina

- Advertisement -

இந்தியா – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 17ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆரம்பம் முதலே இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்தியஅணியின் கை மேலோங்கியே உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் டாஸ்வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.முதலில் விளையாடிய இந்திய அணி 20ஓவர்களின் முடிவில் 176 ரன்களை எடுத்தது.

நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா வெறும் 30 பந்துகளில் 47ரன்களை விளாசி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். பீல்டிங்கிலும் நேற்று அபாரமாக செயல்பட்டு அசத்தினார்.ஒட்டுமொத்தத்தில் நேற்றைய வெற்றியில் ரெய்னாவின் பங்கு மிகமிக முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது.

Advertisement