எப்போதான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவீங்க ? ரசிகரின் கேள்விக்கு – நெகிழ்ச்சியான பதிலளித்த இம்ரான் தாஹிர்

Tahir

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி பெற்ற சென்னை அணி அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் நடந்து நான்கு போட்டிகளிலும் டுப்லஸ்ஸிஸ், சாம் கரன், மொயின் அலி, பிராவோ மற்றும் லுங்கி இங்கிடி போன்ற வீரர்களை மட்டுமே மகேந்திர சிங் தோனி பயன்படுத்தி வந்துள்ளார்.

Tahir

சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்பின் பவுலர் இம்ரான் தாகிர் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை. நீங்கள் எப்போது விளையாடுகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அண்மையில் பதிலளித்துள்ளார். சென்னை அணி இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாக விளையாடி வருகிறது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

சென்னை அணியில் ஒரு வீரராக இருக்கையில் எனக்கு எப்பொழுதும் பெருமையே. தற்பொழுதுள்ள வீரர்களே மிக சிறந்த வகையில் விளையாடி வருகிறார்கள். நான் எப்போது விளையாடுவேன் என்று எனக்கு தெரியாது ஆனால் அனைத்து தேவைப்படும் நேரத்தில் நான் கண்டிப்பாக களமிறங்கி என்னுடைய பங்களிப்பை எப்பொழுதும் போல கொடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியது அனைத்தும் சென்னை ரசிகர்களையும் நெகிழ்ச்சி படுத்தியுள்ளது.

இம்ரான் தாஹிர் தற்போது வரை மொத்தமாக 58 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் அதில் அவர் மொத்தமாக 80 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 16.15 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்காக இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ள தாஹிர் மொத்தமாக 33 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

Tahir-2

சென்னை அணி 2018 ஆம் ஆண்டு கோப்பையை வென்றபோது கூட அவர் அணிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்காக அவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ( சென்ற ஆண்டு ) பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடினார் அந்த போட்டியில் 4 ஒவர்கள் வீசிய இம்ரான் தாஹிர் மொத்தமாக 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீழ்த்திய அந்த விக்கெட் கிறிஸ் கெயில் விக்கெட் என்பது சிறப்பம்சமாகும்.