விக்கெட் எடுத்தவுடன் கிலோ மீட்டர் கணக்கில் நான் ஓட்டம் எடுத்து கொண்டாட இதுவே காரணம் – ரகசியத்தை உடைத்த தாஹிர்

Tahir
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த மூன்று வருடமாக விளையாடி வருபவர் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இவருக்கு தற்போது 40 வயதாகிறது. வயதானாலும் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளில் தனியாளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். இவரது சிறப்பம்சம் என்னவென்றால் விக்கெட் எடுத்து விட்டால் ஆடுகளத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பார். கையை விரித்துக்கொண்டு ஓட்டமெடுக்கும் இவரது செலெப்ரேஷன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு விஷயமாகும்.

Tahir

- Advertisement -

மேலும், பலரும் இந்த பாணியை கடைபிடித்து தற்போது ஆடுகளத்தில் தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு எடுத்த பேட்டி ஒன்றில் இம்ரான் தாஹிர் கிரிக்கெட் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் விக்கெட் எடுத்தால் ஏன் பல மைல் தூரம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ? அதற்கான காரணம் என்ன ? என்று அஸ்வின் இம்ரான் தாகிர் இடம் கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர் அதனை நான் ஒரு ஃபேஷன் என்று தான் கூறுவேன்.

Tahir

ஆனால் எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை. 15 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டில் கிளப் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தேன் .அப்போது விக்கெட் விழுந்த பின்னர் சந்தோசத்தில் ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன் மைதானத்திற்கு வெளியே இருந்த சாலை வரை ஓடிவிட்டேன்.

tahir

அதன் பின்னர் மீண்டும் பொடி நடையாக நடந்து மைதானத்திற்குள் வந்தேன். அப்போது ஆடுகளத்திற்கு இருந்தவர்கள் என்னை பார்த்து சிரித்தார்கள். அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது போலும் ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இதுதான் எனது பாணி என்று தெரிவித்து இருக்கிறார் இம்ரான் தாஹிர்.

Advertisement