உம்ரான் மாலிக்கை தாண்டி நான் அந்த சாதனையை நிச்சயம் படைப்பேன் – சவால் விட்ட 20 வயது பாக் வீரர்

Ihsanullah-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தனது அதிவேக பந்துவீச்சு காரணமாக விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டினை பெற்றார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் அவரது திறனை கண்ட இந்திய அணியும் கடந்த ஆண்டு அவரை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகள் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Umran Malik

அதுமட்டுமின்றி 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணற வைக்கும் இவர் இந்திய அணி சார்பாக அதிவேகமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்தி இருந்தார். இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது அவர் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி இந்த சாதனையை செய்திருந்தார். அதோடு இனிவரும் காலத்தில் நிச்சயம் 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச முயற்சிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பி.எஸ்.எல் தொடரில் பந்துவீசி வரும் 20 வயதான இஸானுல்லா என்பவர் உம்ரான் மாலிக்கை தாண்டி தன்னால் வேகமாக பந்துவீச முடியும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொண்டு வரும் நாடாக பாகிஸ்தான் திகழ்கிறது. கடந்த காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், சமி என்று பல்வேறு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கினார்கள்.

Ihsanullah

அதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான அணியில் ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது வசீம், ஹாரிஸ் ரவுப் என ஏகப்பட்ட பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மேலும் அந்த அணிக்கு ஒரு அதிவேகப்பந்து வீச்சாளர் கிடைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் PSL தொடரில் முல்தான் சுல்தான் அணிக்காக விளையாடி வரும் 20 வயது வீரரான இஸானுல்லா தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

- Advertisement -

முல்தான் சுல்தான் அணியை சேர்ந்த இவர் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் இதுவரை வெகுசில போட்டிகள் மட்டுமே நடைபெற்ற வேளையில் அவர் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். PSL தொடரில் அவர் வீசிய முதல் ஓவரில் அனைத்து பந்துகளுமே 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி அசத்தியுள்ளார். அதோடு சராசரியாக மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி வருகிறார்.

Ihsanullah 2

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அப்துல் ரசாக் இவரைப் பற்றி கூறும் பொழுது : நிச்சயம் சரியான பயிற்சி மற்றும் உடற்தகுதி ஆகியவை இருக்கும் பட்சத்தில் இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச முடியும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய வீரரான உம்ரான் மாலிக்கின் சாதனையாய் முறியடிப்பது குறித்து பேசியுள்ள இஸானுல்லா கூறுகையில் : இறைவன் நாடினால் உம்ரான் மாலிக்கின் அதிவேகப்பந்துவீச்சை தாண்டி நான் பந்துவீச முயற்சிப்பேன். அதுமட்டும் இன்றி மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவதை தான் என் இலக்காக கொண்டிருக்கிறேன் என்றும் அதற்காக தற்போது பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இணையும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

உலக அளவில் அதிவேகப்பந்து வீசிய சாதனையை செய்துள்ள சோயிப் அக்தர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி உள்ளார். அவரது சாதனையையும் இவர் முறியடித்து முன் செல்வார் என்று பலரும் அவர் மீது நம்பிக்கை தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement