ஜஸ்ப்ரித் பும்ராவை விட எங்காளு தான் சிறந்த பவுலர்.. பாகிஸ்தான் வீரர் பெருமை பாடும் பேட்டி

Inshanullah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து அவர் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வெல்ல அவர் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

பும்ரா விட சிறந்தவர்:

அதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தற்போது அவர் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதனால் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூட சமீபத்தில் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை விட நாசீம் ஷான் தான் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தான் வீரர் இக்சனுல்லா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பார்க்கும் போது ஜஸ்ப்ரித் பும்ராவை விட நாசீம் ஷான் சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். நாசீம் ஷா 2022 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் சில நேரங்களில் அவரைப் போன்ற சில வீரர்கள் ஒரு வருடம் கூட கடினமான காலங்களுக்குள் தள்ளப்படுவார்கள்”

- Advertisement -

பெருமை பேச்சு:

“அதையும் தாண்டி நாசீம் ஷா சிறந்த பவுலர் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார். இருப்பினும் நாசீம் ஷா காயத்திலிருந்து குணமடைந்த பின்பும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரிலும் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையும் படிங்க: விராட் கோலியை சாய்த்ததே கேரியரின் உச்சம்.. மறுபடியும் இந்தியாவை சாய்க்க இதை செய்வோம்.. பிலிப்ஸ் பேட்டி

அதனால் பாபர் அசாம், சாகின் அப்ரிடி ஆகியோருடன் அவரையும் ஓய்வு என்ற பெயரில் பாகிஸ்தான் வாரியம் கழற்றி விட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பும்ராவை விட நாசீம் ஷா சிறந்த பவுலர் என்று இவர் தெரிவிப்பதை பார்ப்பது பெருமை பேசுவதாகவே இருப்பதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement