விராட் கோலியை சாய்த்ததே கேரியரின் உச்சம்.. மறுபடியும் இந்தியாவை சாய்க்க இதை செய்வோம்.. பிலிப்ஸ் பேட்டி

Glenn Phillips
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இந்திய மண்ணில் 36 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக அந்தப் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா கடைசி வரை போராடியும் வெற்றி பெற முடியவில்லை.

குறிப்பாக 2வது இன்னிங்ஸில் சர்பராஸ் கானுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் போட்ட விராட் கோலி 70 ரன்கள் குவித்து இந்தியாவை தூக்கி நிறுத்த போராடினார். ஆனால் அப்போது 3வது நாளின் கடைசி பந்தில் நியூஸிலாந்தின் பகுதி நேர பவுலரான கிளன் பிலிப்ஸ் சுழலில் விராட் கோலி அவுட்டானது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. மறுபுறம் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பிலிப்ஸ் அதை வெறித்தனமாக கொண்டாடினார்.

- Advertisement -

பெரிய விக்கெட்:

இந்நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தது தம்முடைய பவுலிங் கேரியரில் உச்சகட்ட செயல்பாடு என்று கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் போட்டியை போலவே செயல்முறைகளை பின்பற்றி இரண்டாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஆம் தற்சமயத்தில் விராட் கோலி என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய விக்கெட்டுகளில் ஒன்று. நாளின் கடைசி பந்தில் அது போன்ற ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியது அற்புதமானது. ஏனெனில் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் கடைசி பந்தில் அந்த விக்கெட்டை எடுத்து பங்காற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது”

- Advertisement -

2வது போட்டியிலும்:

“அந்த சமயத்தில் இந்தியா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த விக்கெட்டை எடுத்தது அடுத்த நாளில் எங்களுக்கு வெற்றியின் வேகத்தை கொடுத்தது. கடந்த காலங்களில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் இங்கே வந்து முயற்சித்தும் வெற்றிகளை பெற முடியவில்லை. தற்போது நாங்கள் 36 வருடங்கள் கழித்து வென்றுள்ளது ஸ்பெஷலானது”

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவரின் மகன் டூ டி.எஸ்.பி.. தனது வாழ்க்கை பயணம் குறித்த நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்த – முகமது சிராஜ்

“முதல் போட்டியில் கிடைத்த வெற்றியால் நாங்கள் மீண்டும் எங்களுடைய செயல்முறைகளைப் பின்பற்ற உச்சமாக வருகிறோம். புனேவில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் அதே போன்ற ஓட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்” எனக் கூறினார். இதையடுத்து இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement