இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 16 டி20 போட்டிகள் 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 93 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டிரைவரின் மகன் டூ டி.எஸ்.பி :
ஆரம்பகட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கும் பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட சிராஜ் விராட் கோலியின் தலைமையில் பெங்களூரு அணியில் இணைந்த பிறகு மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதோடு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த அவருக்கு தெலுங்கானா அரசு போலீஸ் டி.எஸ்.பி பதவியை வழங்கி அவரை கௌரவித்தது. இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் மகனான அவர் தற்போது டிஎஸ்பி-ஆக உயர்ந்துள்ளது வரை குறித்த தனது பயணத்தை நெகிழ்ச்சியான கருத்தாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஆரம்ப காலகட்டத்தில் எங்களுக்கு போதுமான உணவும், பணமும் இருந்தது கிடையாது. எனது அப்பா ஆட்டோ டிரைவர் என்பதனால் நிறைய கஷ்டங்கள் இருந்தது. ஆனாலும் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொள்ளவில்லை.
எதிர்காலத்தில் கிரிக்கெட்டை மட்டுமே வாழ்க்கையாக நம்பினேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் என்னிடம் இருந்தது. அந்த வகையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது மிகப்பெரிய உயரத்தை தொட்டுள்ளேன். எனது தந்தை மரணமடைந்த போது நான் விளையாடிய போட்டி நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.
இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.. இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ
நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. தற்போது அதனை பூர்த்தி செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய உழைப்பிற்காக எனது மாநில அரசு டி.எஸ்.பி பதவியை வழங்கி உள்ளது. இந்த பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என முகமது சிராஜ் நெகிழ்ச்சி கருத்தினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



